ஸ்ரீமதே ராமானுஜாய நம:
பகவத் கிருபையால் இம்முறை இந்தியா சென்ற போது ஸ்ரீமத் பகவத் இராமனுசர் பகவத் கைங்கர்யம் செய்த திரு கோயில்கள் ஆன திருவரங்கம், திருவேங்கடம் ,காஞ்சீவரம்,திருநாராயணபுரம
இந்தியா புறப்படுவதற்கு முன்தான் இராமானுச நூற்றந்தாதி சந்தை சொல்ல கற்றுக்கொண்டு இருந்தேன். முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்ட பிரயாணம் இல்லை. ஆனால் இந்த அளவு நடக்கும் என்று துளி அளவும் நினைக்கவில்லை. எல்லாம் பகவான் கிருபைதான்.
பின் குறிப்பு : சிகாகோ வந்து சேர்ந்த பின் ஒரு நாள் கனவில் மிகவும் அதிசயமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கனவில் உயர்திரு வேளுக்குடி கிருஷ்ணன்
அவர்கள் வேத விற்பன்னர்கள், பக்த கோடிகள் சூழ இராமானுசரை( உத்சவர்) எள பண்ணிக்கொண்டு கால் நடையாக ஸ்ரீரங்கத்தில் இருந்து திருகோவிலூர்
வரை சென்று, இராமானுசரை கோவில் உச்சி மேல் எளப்பண்ணி, உயர்திரு வேளுக்குடி கிருஷ்ணனோடு கூடி இருந்த பல் லக்ஷம் பக்தர்கள்
"ஓம் நமோ நாராயணாய" என்று கோஷமிட கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் இருந்து திருகோட்டியூர் போகும் வழியில் பல ஊர்களில் நின்று தங்கி இராமனுசருக்கு
திருமஞ்சனம் செய்து, ஆயிரம் கணக்கான ஏழை எளியோருக்கு அன்னதானம் நடக்க கண்டேன். இந்த கனவு மாறி மாறி இரண்டு நாட்கள் வந்தது.
இரண்டாம் கனவில் உயர்திரு வேளுக்குடி கிருஷ்ணன் இந்த ஏற்பாடு வருடம் தோறும் நடக்கும் என்று அறிவித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து திருகோவிலூர்
போகும் வழியில் எல்லாம் வேத கோஷங்களும், திவ்ய பிரபந்த கிரமமாக ஒலித்து கொண்டே இருந்தது. இந்த கனவின் அர்த்தம் புரியவில்லை. இது
நிஜத்தில் நடக்குமா என்பது தெரியாது. கனவு மிகவும் தெளிவாக இருந்தது. விசித்திரமான கனவு!!!
No comments:
Post a Comment